செய்திகள் மலேசியா
ஒரு கோடியே 42 லட்சத்திற்கும் அதிகமானோர் புடி மடானி ரோன்95 திட்டத்தின் வழி பயன் பெறுகின்றனர்: டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா
புத்ரா ஜெயா:
தகுதிபெற்ற ஒரு கோடியே 16 லட்சம் பேரில் ஒரு கோடியே 42 லட்சத்திற்கும் அதிகமானோர் புடி மடானி ரோன்95 திட்டத்தின் வழி பயனடைந்துள்ளனர்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு 1,340 கோடி லிட்டருக்கும் அதிகமான பெட்ரோல் எரிபொருள் பயன்படுத்தப்பட்டதாக இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
''2025-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2026-ஆம் ஆண்டு ஜூன் வரையில் உண்மையான புடி95 பயன்பாட்டுத் தரவுகளின் அடிப்படையில், புடி95 பயனர்களில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே தொடர்ந்து 200 லிட்டருக்கும் அதிகமான ரோன்95-ஐப் பயன்படுத்துகின்றனர்'', என்றார் அவர்.
ரோன்95-க்கு இலக்கிடப்பட்ட உதவித் தொகையை அமல்படுத்துவதால் ஏற்படும் வருடாந்திர சேமிப்பின் விளைவுகள் குறித்து செனட்டர் டத்தோ பொப்பெய் அஹ் ஃபாங் பின் சுவான் எழுப்பிய கேள்விக்கு அமிர் ஹம்சா அவ்வாறு பதிலளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2026, 12:08 pm
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பை பிரதமர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: புவாட்
August 3, 2026, 12:05 pm
இருதய அறுவை சிகிச்சைக்கு முன் துணைப் பிரதமர் ஃபாடிலாவின் உடல்நிலை சீராக உள்ளது
August 3, 2026, 11:59 am
தெலுக் இந்தான் மணல் மேடு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் பக்தி வெள்ளத்தில் நடைபெற்ற தீச்சட்டி உற்சவம்
August 3, 2026, 11:50 am
சோலார் ஊழல் குற்றத்தீர்ப்பு மேல்முறையீட்டில் புதிய சான்றுகளைச் சமர்ப்பிக்க ரோஸ்மா அனுமதி கோரினார்
August 3, 2026, 11:42 am
சுங்கை பூலோ இளையோருக்கு 10,000 இலவச சைக்கிள்கள்; ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும்: டத்தோஸ்ரீ ரமணன்
August 3, 2026, 11:02 am
