செய்திகள் மலேசியா
தெலுக் இந்தான் மணல் மேடு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் பக்தி வெள்ளத்தில் நடைபெற்ற தீச்சட்டி உற்சவம்
தெலுக் இந்தான்:
தீச்சட்டியின் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல், அம்மன் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னிச்சட்டி ஏந்தி வழிபட்ட காட்சி, தெலுக் இந்தான் மணல் மேடு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் ஆன்மிக அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆடி மாதத்தை முன்னிட்டு தெலுக் இந்தான், ஜாலான் பண்டாரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மணல் மேடு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் தீச்சட்டி உற்சவத்தில், இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை பக்தி பரவசத்துடன் நிறைவேற்றினர்.
அம்மனிடம் முன்வைத்த வேண்டுதல்கள் நிறைவேறியதற்கான நன்றியாகவும், குடும்ப நலன், உடல் ஆரோக்கியம், வளமான வாழ்க்கை மற்றும் மன அமைதியை வேண்டியும் பக்தர்கள் பக்தி பரவசம் கமழ தீச்சட்டி ஏந்தி ஆலயத்தைச் சுற்றி வந்து வழிபட்டனர்.
மேளதாளங்கள் முழங்க, "ஓம் சக்தி! பராசக்தி!" என்ற பக்தி முழக்கங்கள் விண்ணைத் தொட்ட நிலையில், அக்னிச்சட்டியுடன் பக்தர்கள் மேற்கொண்ட ஊர்வலம் பார்ப்போரை பக்தி உணர்வில் ஆழ்த்தியது.
மாபெரும் இவ்விழாவையொட்டி ஸ்ரீ மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு சமய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
அம்மன் மீதான ஆழ்ந்த நம்பிக்கையையும், தலைமுறை தலைமுறையாக தொடரும் ஆன்மிக பாரம்பரியத்தையும் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இத்தீச்சட்டி உற்சவம், பக்தர்களின் மனதில் நீங்கா ஆன்மிக அனுபவத்தை ஏற்படுத்திய விழாவாக அமைந்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2026, 12:08 pm
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பை பிரதமர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: புவாட்
August 3, 2026, 12:05 pm
இருதய அறுவை சிகிச்சைக்கு முன் துணைப் பிரதமர் ஃபாடிலாவின் உடல்நிலை சீராக உள்ளது
August 3, 2026, 11:50 am
சோலார் ஊழல் குற்றத்தீர்ப்பு மேல்முறையீட்டில் புதிய சான்றுகளைச் சமர்ப்பிக்க ரோஸ்மா அனுமதி கோரினார்
August 3, 2026, 11:42 am
சுங்கை பூலோ இளையோருக்கு 10,000 இலவச சைக்கிள்கள்; ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும்: டத்தோஸ்ரீ ரமணன்
August 3, 2026, 11:02 am
சிப்பாங் போலிஸ் தலைமையகம் அருகிலுள்ள பகுதியில் கடுமையான காட்டுத்தீ
August 2, 2026, 9:01 pm
