நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பை பிரதமர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: புவாட்

ஜொகூர்பாரு:

தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையிலான ஒத்துழைப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

முன்னாள் அம்னோ தலைவர்களில் ஒருவரான புவாட் ஷர்காஷி இதனை கூறினார்.

நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கும், மாநில சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கும் தேசியக் கூட்டணி முக்கியப் பங்காற்றியது என்று கூறிய பாஸ் மத்திய செயற்குழு உறுப்பினர் அனுவார் மூசாவை விமர்சித்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

அனுவார் ஆணவம் கொண்டவர் என்று குற்றம் சாட்டிய புவாட், அவர்களின் ஒருங்கிணைந்த இடங்களும் போதுமானதாக இருப்பதால், பிஎன் உண்மையில் நம்பிக்கை கூட்டணி உடன் இணைந்து ஒரு அரசாங்கத்தை அமைக்க முடியும் என்று வாதிட்டார்.

உண்மையில், ஒரு தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தை (18 இடங்கள் மற்றும் 11 இடங்கள்) அமைக்க முடியும்.

ஆனால் இந்த முறைஅம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடிக்கு தேசியக் கூட்டணி மீது அதிக நம்பிக்கை உள்ளது. 

இந்த சூத்திரம் மலாக்காவில் தொடர வேண்டும் என்று ஜாஹித் விரும்புகிறார்.

ஆக தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பை  பிரதமர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset