செய்திகள் மலேசியா
தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் முன்னாள் மாணவர்களின் கைகளில்: பெர்தாமாவின் 17ஆவது தேசியப் பேராளர் மாநாட்டில் சிவக்குமார் வேண்டுகோள்
ஈப்போ:
ஒரு காலத்தில் தங்களுக்கு கல்வி வழங்கிய தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொறுப்பு, அந்தப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களின் கைகளிலும் உள்ளது என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவக்குமார் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி என்பது அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் மட்டுமே சாத்தியமல்ல.
முன்னாள் மாணவர்கள் தங்களது பள்ளிகளுடன் மீண்டும் இணைந்து செயல்பட்டு, மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பணிகளில் நேரடியாக ஈடுபட வேண்டும்.
பேராக், ஈப்போவில். நடைபெற்ற மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் (பெர்தாமா) 17ஆவது தேசியப் பேராளர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியபோது சிவக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலை தொடர்ந்து கவலையளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இந்தச் சவாலை எதிர்கொள்ள முன்னாள் மாணவர் சங்கங்கள் ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியுடனும் இணைந்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
நாம் இன்று பெற்றிருக்கும் கல்விக்கும், சமூகத்தில் அடைந்துள்ள உயர்வுக்கும் தமிழ்ப்பள்ளிகளே அடித்தளம்.
அந்தப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக மீண்டும் களமிறங்கி பணியாற்றுவது ஒவ்வொரு முன்னாள் மாணவரின் தார்மீகப் பொறுப்பாகும் என சிவகுமார் குறிப்பிட்டார்.
மேலும், பெர்தாமாவின் இந்த 17ஆவது தேசியப் பேராளர் மாநாட்டின் ஏற்பாட்டுக்காக தமது சார்பில் 5,000 ரிங்கிட் நன்கொடை வழங்குவதாகவும் அவர் அறிவித்தார்.
இதனிடையே, இம்மாநாட்டில் தலைமையுரையாற்றிய மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் (பெர்தாமா) தலைவர் குமரன் மாரிமுத்து, தமிழ்ப்பள்ளிகள் வெறும் கல்வி நிலையங்கள் அல்ல; தமிழ் மொழி, பண்பாடு மற்றும் சமூக அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முக்கியத் தூண்கள் என சுட்டிக்காட்டினார்.
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் முன்னாள் மாணவர் அமைப்புகள் ஒருங்கிணைந்து, புதிய மாணவர் சேர்க்கை இயக்கங்கள், பெற்றோர் சந்திப்புகள், கல்வி ஊக்கத் திட்டங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் இந்த தேசிய மாநாடு, தமிழ்ப்பள்ளிகளின் மீதான பொறுப்புணர்வை மீண்டும் உறுதிப்படுத்தி, கல்வி வளர்ச்சிக்கான புதிய செயல்திட்டங்களை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படுவதாக பெர்தாமாவின் தேசியத் துணைத் தலைவரும் இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான விஜய் வேலாயுதம் தெரிவித்தார்.
மேலும் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் அவற்றின் எதிர்காலம் மேலும் வலுப்பெறும். இது ஒருவரின் பொறுப்பு அல்ல; ஒட்டுமொத்த சமூகத்தின் கடமை,” என அவர் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 3, 2026, 12:08 pm
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பை பிரதமர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: புவாட்
August 3, 2026, 12:05 pm
இருதய அறுவை சிகிச்சைக்கு முன் துணைப் பிரதமர் ஃபாடிலாவின் உடல்நிலை சீராக உள்ளது
August 3, 2026, 11:59 am
தெலுக் இந்தான் மணல் மேடு ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் பக்தி வெள்ளத்தில் நடைபெற்ற தீச்சட்டி உற்சவம்
August 3, 2026, 11:50 am
சோலார் ஊழல் குற்றத்தீர்ப்பு மேல்முறையீட்டில் புதிய சான்றுகளைச் சமர்ப்பிக்க ரோஸ்மா அனுமதி கோரினார்
August 3, 2026, 11:42 am
சுங்கை பூலோ இளையோருக்கு 10,000 இலவச சைக்கிள்கள்; ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும்: டத்தோஸ்ரீ ரமணன்
August 3, 2026, 11:02 am
