நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

LRT SHAH ALAM இலகு ரயிலின் இலவச சேவை ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிப்பு

ஷா ஆலாம்: 

LRT SHAH ALAM இலகு ரயிலின் இலவச சேவை ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 

இந்த தகவலை RAPID KL அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்தது 

பெட்டாலிங் ஜெயா, ஷா ஆலம் மற்றும் கிள்ளான் ஆகியவற்றை இணைக்கும் புதிய பொதுப் போக்குவரத்து அமைப்பிற்கு அதிக பயனர்கள் பழகிக்கொள்ள வாய்ப்பளிக்கிறது என்று அந்நிறுவனம் தெளிவுப்படுத்தியது 

இலவச சேவை நீட்டிப்பு காரணமாக பொதுமக்கள் LRT 3 இலகு ரயில் சேவையை பயன்படுத்தவும் பொதுப்பேருந்து இலவச சேவையையும் பயன்படுத்த ஊக்குவிக்கபடுகின்றனர் 

இந்த இலவச சேவையின் விரிவாக்கம், அதிகப் பயனாளர்களுக்குப் பயனளிப்பதோடு, தினசரி பயணச் செலவுகளையும் குறைக்கும் என்றும், நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் செயல்திறன் மற்றும் வசதி மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் ரேபிட் கேஎல் நம்புகிறது.

கடந்த ஜூன் 28ஆம் தேதி பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் LRT3 SHAH ALAM வழித்தடத்தை அறிமுகம் செய்து வைத்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset