செய்திகள் மலேசியா
ஆசியா-பசிபிக் வர்த்தக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் உலக வர்த்தகப் பேரவை
கோலாலம்பூர்:
மலேசியாவில் சர்வதேச வர்த்தகர்கள், பெருநிறுவனத் தலைவர்களை ஒன்றிணைக்கும் உலக வர்த்தக பேரவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
மலாக்கா மாநில ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்த தொடக்க நிகழ்வு, கோலாலம்பூர் ஷங்க்ரிலா ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றதாக மலேசியப் பொருளாதார வியூக மன்றத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹம்மது இக்பால் தெரிவித்தார்.
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள், பெருநிறுவனத் தலைவர்களுக்கு இடையே வர்த்தகத் தொடர்புகளை வலுப்படுத்துவதே இந்தப் பேரவையின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் மேலும் கூறினார்.
ஷாங்க்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற இரவு விருந்தில் உரையாற்றிய பேரவையின் புரவலர் துன் ஜாக்கி, அமைப்பின் எதிர்காலப் பங்களிப்பு குறித்து விளக்கினார்.
RCEP பிராந்தியம், ஆசிய-பசிபிக் பகுதியில் உருவாகி வரும் வர்த்தக, முதலீட்டு வாய்ப்புகளில் உலக வர்த்தகப் பேரவை முக்கிய பங்காற்றும் என அவர் தெரிவித்தார்.
வட்டார நாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாகவும் துன் ஜாக்கி சுட்டிக்காட்டினார்.
வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், நிறுவனத் தலைவர்கள் ஒரே தளத்தில் இணைவதன் மூலம் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, சர்வதேச பேரவைக்கான இணைத் தலைவராக டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டான்ஸ்ரீ மைக்கேல் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வர்த்தக, பெருநிறுவனத் தலைவர்களை ஒருங்கிணைத்து, சர்வதேச அளவில் புதிய வர்த்தக உறவுகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் மலேசியாவுக்கும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கும் இடையிலான வர்த்தக, முதலீட்டுத் தொடர்புகள் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
உலக வர்த்தக பேரவையின் முதல் சர்வதேச தலைவர்கள் ஒன்றுகூடல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் லண்டனில் நடைபெறவுள்ளது
இந்தக் கூட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்த்தக, பெருநிறுவனத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று டத்தோ ஸ்ரீ முஹம்மது இக்பால் கூறினார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2026, 5:52 pm
LRT SHAH ALAM இலகு ரயிலின் இலவச சேவை ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிப்பு
July 31, 2026, 5:07 pm
போதைப்பொருளைக் கடத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் மலேசிய விமானி இந்தோனேசியாவில் கைது
July 31, 2026, 4:26 pm
நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு வழங்க வேண்டும்: டத்தோஶ்ரீ அன்வார்
July 31, 2026, 3:13 pm
பிரதமர் முன்னிலையில் 2026-ஆம் ஆண்டு தேசிய வீரர்கள் தினம்
July 31, 2026, 1:36 pm
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தாபோங் ஹாஜிக்குள் நுழைந்தது
July 31, 2026, 1:34 pm
நெகிரி செம்பிலான் தேர்தலில் கடைசி நேர நாடகங்களை மக்கள் நம்பி ஏமாறக்கூடாது: டத்தோ டி. மோகன்
July 31, 2026, 12:53 pm
