நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துறைமுக வருவாய் கசிவுகளைக் கையாள்வதில் சிறப்புப் பணிக் குழுவின் பங்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்

கிள்ளான்:

துறைமுக வருவாய் கசிவுகளைக் கையாள்வதில் சிறப்புப் பணிக்குழுவின் பங்கு முழுமையாக தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

மேரிடைம் நெட்வோர்க் குழுமத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் ராமசாமி இதனை வலியுறுத்தினார்.

வருவாய் கசிவுகளைக் கையாள்வதற்காக எம்ஏசிசிக்கும் சுங்கத் துறைக்கும் இடையே ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, குறிப்பாக அதன் அதிகார வரம்பு, செயல்பாட்டு நோக்கம், அது தனது கண்டுபிடிப்புகளைப் பொதுமக்களுக்கு எவ்வாறு தெரிவிக்கும் என்பது குறித்து தற்போது மேலும் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளது.

இந்த இரு முகமைகளுக்கு இடையேயான இந்த மூலோபாய ஒத்துழைப்பு, அமலாக்கத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு நேர்மறையான படியாகும்.

குறிப்பாக, கொள்கலன் மேலாண்மை, கடத்தல், ஆவண மோசடி, வரி ஏய்ப்பு முயற்சிகள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில் இது முக்கியத்துவம் பெறுகிறது.
இருப்பினும், இந்தப் பணிக்குழு எவ்வாறு செயல்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

அதன் முதன்மைப் பங்கு கண்காணிப்பா, தடுப்பா அல்லது இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிரான அமலாக்கமா என்பதும் இதில் அடங்கும்.

ஆக இது குறித்து முழுமையாக விளக்கமளிக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஜெயந்திரன் வலியுறுத்தினார்.

முன்னதாக சுங்கத் துறை தலைமை இயக்குநர் டத்தோ அம்ரான் அகமது, எம்ஏசிசி தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்தபோது, ​​இந்தப் பணிக்குழுவை அமைப்பதற்கான முன்மொழிவு விவாதிக்கப்பட்டதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் முன்னதாகக் கூறினார்.

சுங்க ஆய்வு நடைமுறைகள், நிர்வாகத் தடைகள், சுங்கத் துறை எதிர்கொள்ளும் உள் பிரச்சினைகள் உள்ளிட்ட செயல்பாட்டுச் சவால்கள் குறித்தும் இரு முகமைகளும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset