நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில தேர்தலில் BN- PN கூட்டணி 22 சட்டமன்றத்தைக் கைப்பற்றி  வெற்றிப்பெறும்: இல்ஹாம் சென்டர் கணிப்பு 

சிரம்பான்: 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் BN - PN கூட்டணி 36 சட்டமன்ற தொகுதிகளில் 22 இடங்களைக் கைப்பற்றி வெற்றிப்பெறும் என்று இல்ஹாம் சென்டர் கணித்துள்ளது. 

22 சட்டமன்ற தொகுதிகளை வென்றாலும் மாநில சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையான 24 இடங்களை BN- PH கூட்டணி எட்டாது என்று அந்த அமைப்பு குறிப்பிட்டது. 

இந்நிலையில் நம்பிக்கை கூட்டணி வெறும் ஒன்பது தொகுதிகளில் மட்டுமே வெற்றிப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஐந்து தொகுதிகளின் முடிவுகள் மிகவும் கடுமையான போட்டியாக இருப்பதால் அவற்றை முன்கூட்டியே கணிக்க முடியாத நிலை காணப்படுகிறது.


BN-PN இடையிலான புரிந்துணர்வு, மலாய்-இஸ்லாமிய வாக்காளர்களின் ஆதரவை மேலும் ஒருங்கிணைக்க உதவியுள்ளதாக Ilham Centre தெரிவித்துள்ளது. Umno மற்றும் PAS ஆகிய இரண்டு முக்கிய மலாய்-இஸ்லாமிய கட்சிகள் முறையே BN மற்றும் PN கூட்டணிகளுக்கு தலைமை வகிப்பதால், மலாய் வாக்குகள் மிகவும் ஒழுங்காகவும் திறமையாகவும் BN-PN பக்கம் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற ஜொகூர் PRN-இல் BN பெற்ற ஆதரவைக் காட்டிலும், நெகிரி செம்பிலானில் BN-PN கூட்டணிக்கு மலாய் வாக்காளர்களிடமிருந்து அதிக ஆதரவு கிடைக்கும் என Ilham Centre கணித்துள்ளது.

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் நாளை ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset