செய்திகள் மலேசியா
நெகிரி செம்பிலான் தேர்தலில் கடைசி நேர நாடகங்களை மக்கள் நம்பி ஏமாறக்கூடாது: டத்தோ டி. மோகன்
போர்ட்டிக்சன்:
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் கடைசி நேர நாடகங்களை மக்கள் நம்பி ஏமாறக்கூடாது.
மஇகா முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் இதனை வலியுறுத்தினார்.
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை நடைபெறவுள்ளது.
இத்தேர்தலை முன்னிட்டு இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த இறுதிக் கட்டத்தில் தான் பல்வேறு அவதூறுகள், பொய்யான தகவல்கள் பரப்பப்படும்.
குறிப்பாக தேசிய முன்னணி மீது பாஸ் கட்சி விவகாரம் உட்பட பல குற்றச்சாட்டுகளை எழுப்புவார்கள்.
அதே வேளையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மன்னிப்பு, எம்ஜிஆர் நடனம் என பல நாடகங்கள் அரங்கேறும்.
இதை பார்த்து மக்கள் ஏமார்ந்து விடக் கூடாது.
நெகிரி செம்பிலானில் தேசிய முன்னணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும்.
குறிப்பாக சிரம்பான் ஜெயாவில் தினாளனும் ஸ்ரீ தஞ்சோங்கில் அச்சுதனும் வெற்றி பெற வேண்டும்.
இதற்கு மக்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும்.
இந்த ஆதரவு நெகிரி செம்பிலான் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் உருமாற்றத்திற்கும் வித்திடும்.
ஸ்ரீ தஞ்சோங் தொகுதி இந்திய மக்களுடனான சந்திப்புக் கூட்டத்திற்கு பின் டத்தோ டி. மோகன் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2026, 5:52 pm
LRT SHAH ALAM இலகு ரயிலின் இலவச சேவை ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிப்பு
July 31, 2026, 5:07 pm
போதைப்பொருளைக் கடத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் மலேசிய விமானி இந்தோனேசியாவில் கைது
July 31, 2026, 4:26 pm
நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு வழங்க வேண்டும்: டத்தோஶ்ரீ அன்வார்
July 31, 2026, 3:49 pm
ஆசியா-பசிபிக் வர்த்தக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் உலக வர்த்தகப் பேரவை
July 31, 2026, 3:13 pm
பிரதமர் முன்னிலையில் 2026-ஆம் ஆண்டு தேசிய வீரர்கள் தினம்
July 31, 2026, 1:36 pm
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தாபோங் ஹாஜிக்குள் நுழைந்தது
July 31, 2026, 12:53 pm
