செய்திகள் மலேசியா
பிரதமர் முன்னிலையில் 2026-ஆம் ஆண்டு தேசிய வீரர்கள் தினம்
புத்ராஜெயா:
2026-ஆம் ஆண்டு வீரர்கள் தினத்தை முன்னிட்டு புத்ராஜெயா, தேசிய வீரர்கள் சதுக்கத்தில் இன்று நடைபெற்ற அணிவகுப்பில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அவரது துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கலந்து கொண்டனர்.
அவர்களோடு தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹம்மத் காலித் நோர்டின், உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் ஆகியோரும் பங்கேற்றனர்.
மலேசிய இராணுவப் படை, ஏ.டி.எம்-மின் தளபதி ஜெனரல் டான் ஶ்ரீ மாலெக் ரசாக் சுலைமான் தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ முஹம்மத் காலித் இஸ்மாயிலும் தேசிய வீரர்கள் தினத்தில் பங்கேற்றனர்.
தொடக்கமாக, நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக தேசியக் கொடியான ஜாலூர் கெமிலாங் அரைக்கம்பத்தில் இறக்கப்பட்டது.
சில வரலாற்றுப்பூர்வ நிகழ்வுகளையும் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் அர்ப்பணிப்பையும் தற்காப்பு படை உறுப்பினர்கள் உணர்ச்சிப்பூர்வ படைப்பாக வழங்கினர்.
அதனைக் கண்டு களித்த பிரதமர், நாட்டின் சுதந்திரம் எளிதில் கிடைத்ததல்ல எனவும் அது வீரர்களின் தியாகத்தால் பெறப்பட்டது என்பதை இன்றைய தலைமுறையினருக்கு நினைவூட்டும் வகையில் அமைந்திருந்ததாக வர்ணித்தார்.
''இது பெரும்பாலும் வெறும் நாடகம் மட்டுமல்ல, தியாகங்களை நினைவுகூர வேண்டியது தருணம். ஏனென்றால், பாதுகாப்புப் படையினரின் சேவையாலும் தியாகங்களாலும்தான் இந்த நாடு சுதந்திரமாகவும், தன்னாட்சியுடனும், அமைதியுடனும், செழிப்பாகவும் இருக்கிறது என்பதைத் தற்போதைய தலைமுறை நினைவில் கொள்ள வேண்டும்'', என்றார் அவர்.
பின்னர், உலு லெகோங் சம்பவத்தில் தொடர்புடைய வீரர்களின் குடும்பத்தினருக்கு அன்வார் பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2026, 5:52 pm
LRT SHAH ALAM இலகு ரயிலின் இலவச சேவை ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிப்பு
July 31, 2026, 5:07 pm
போதைப்பொருளைக் கடத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் மலேசிய விமானி இந்தோனேசியாவில் கைது
July 31, 2026, 4:26 pm
நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு வழங்க வேண்டும்: டத்தோஶ்ரீ அன்வார்
July 31, 2026, 3:49 pm
ஆசியா-பசிபிக் வர்த்தக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் உலக வர்த்தகப் பேரவை
July 31, 2026, 1:36 pm
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தாபோங் ஹாஜிக்குள் நுழைந்தது
July 31, 2026, 1:34 pm
நெகிரி செம்பிலான் தேர்தலில் கடைசி நேர நாடகங்களை மக்கள் நம்பி ஏமாறக்கூடாது: டத்தோ டி. மோகன்
July 31, 2026, 12:53 pm
