நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தசை, எலும்பு வலி காரணமாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிற்குத் தொடர் சிகிச்சை

கோலாலம்பூர்: 

தசை, எலும்பு வலி காரணமாக மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தொடர் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார் 

இந்த தகவலை இஸ்தானா நெகாரா ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது 

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையின்படி, சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு ஓய்வெடுத்து, உடல் நலம் சீரடைவதற்கு போதிய கால அவகாசம் வழங்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று புத்ராஜெயாவில் உள்ள டத்தாரான் பஹ்லவான் நெகாராவில் நடைபெற்ற தேசிய வீரர்கள் தின அணிவகுப்பு விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை.

2026ஆம் ஆண்டுக்கான தேசிய வீரர்கள் தின அணிவகுப்பு இன்று காலை நடைபெற்ற நிலையில், அதில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசூஷன் இஸ்மாயில், பாதுகாப்பு அமைச்சர் காலித் நோர்டின், ஆயுதப்படைகளின் தளபதி மலேக் ரசாக் சுலைமான் மற்றும் தேசிய காவல்துறைத் தலைவர் காலித் இஸ்மாயில் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset