செய்திகள் மலேசியா
போதைப்பொருளைக் கடத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் மலேசிய விமானி இந்தோனேசியாவில் கைது
ஜகார்த்தா:
போதைப்பொருள் கடத்த முயன்றதாக சந்தேகத்தின் பேரில் மலேசிய விமானி ஒருவர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார்.
இதனை இந்தோனேசியா நாட்டின் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இந்தோனேசியாவில் 70,114 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 2.7 கிராம் சியாபு போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மலேசிய விமானி, சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட விமானியின் சிறுநீர் மாதிரியில் MDMA, மெத்தாம்பெட்டமைன் மற்றும் கோகைன் ஆகிய போதைப்பொருட்கள் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் துணை இயக்குநர் அவாலுடின் அமின் தெரிவித்தார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில், சந்தேக நபர் இதற்கு முன்னர் மூன்று முறை இந்தோனேசியாவுக்குள் போதைப்பொருட்களை கடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அவற்றில் இரண்டு முறை ஜகார்த்தா வழியாகவும், மற்றொரு முறை வேறு ஒரு பகுதி வழியாகவும் அவர் போதைப்பொருட்களை கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் செயல்படும் சர்வதேச போதைப்பொருள் கும்பலைக் கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலேசிய விமானி போதைப்பொருள் கடத்தல் கும்பலின் ஒரு சிறிய உறுப்பினரா அல்லது பெரிய சர்வதேச வலையமைப்பின் முக்கிய தொடர்பாளரா என்பதை கண்டறிய இந்தோனேசிய அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2026, 5:52 pm
LRT SHAH ALAM இலகு ரயிலின் இலவச சேவை ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை நீட்டிப்பு
July 31, 2026, 4:26 pm
நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு வழங்க வேண்டும்: டத்தோஶ்ரீ அன்வார்
July 31, 2026, 3:49 pm
ஆசியா-பசிபிக் வர்த்தக வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் உலக வர்த்தகப் பேரவை
July 31, 2026, 3:13 pm
பிரதமர் முன்னிலையில் 2026-ஆம் ஆண்டு தேசிய வீரர்கள் தினம்
July 31, 2026, 1:36 pm
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தாபோங் ஹாஜிக்குள் நுழைந்தது
July 31, 2026, 1:34 pm
நெகிரி செம்பிலான் தேர்தலில் கடைசி நேர நாடகங்களை மக்கள் நம்பி ஏமாறக்கூடாது: டத்தோ டி. மோகன்
July 31, 2026, 12:53 pm
