நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தாபோங் ஹாஜிக்குள் நுழைந்தது

கோலாலம்பூர்:

அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் எட்டு விசாரணை அதிகாரிகள் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்வதற்காக இன்று தாபோங் ஹாஜி தலைமையகத்திற்குச் சென்றனர்.


எம்ஏசிசி தலைமை ஆணையர் அப்துல் ஹலீம் அமான் கூறுகையில்,

நிறுவப்பட்ட நடைமுறையின்படி தொடர்புடைய பட்டியலை ஆய்வு செய்த பிறகு, வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட வேண்டிய நபர்களையும் விசாரணைக் குழு அடையாளம் கண்டு வருகிறது என்றார்.

அனைவரின் தகவலுக்காக, எங்கள் குழு இன்று காலையே தாபோங் ஹாஜி கட்டிடத்திற்குள் நுழைந்துவிட்டது.

விசாரணைக் குழு இன்று காலை விசாரணையைத் தொடங்கியுள்ளது,

மொத்தம் எட்டு அதிகாரிகள் தாபோங் ஹாஜி தலைமையகத்திற்குள் சென்றுள்ளனர் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset