நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணிக்கு ஆதரவு வழங்க வேண்டும்: டத்தோஶ்ரீ அன்வார்

புத்ராஜெயா:

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 16ஆவது சட்டமன்ற தேர்தலில் நம்பிக்கை கூட்டணிக்கு வாக்காளர்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று பிரதமரும் நம்பிக்கை கூட்டணி தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். 

கூட்டரசு அரசாங்கத்துடன் இணைந்து நெகிரி செம்பிலான்  மக்களின் நலனை உறுதி செய்வதற்கு நம்பிக்கை கூட்டணி  தொடர்ந்து பணியாற்றும் என அன்வார் தெரிவித்தார்.

இதன் மூலம் மாநிலத்தின் அனைத்து மக்களும் பயனடைவார்கள் என்றும் அவர் கூறினார்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நெகிரி செம்பிலானில் சீனர்கள், இந்தியர்கள் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினரும் தங்களது வாக்குரிமையை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

தேர்தல் என்பது மக்களின் பொறுப்பை வெளிப்படுத்தும் முக்கிய ஜனநாயக செயல்முறை என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

“நிலைத்தன்மையையும் வளர்ச்சியையும் உறுதி செய்யும் எங்களது சேவையைத் தொடர நம்பிக்கை கூட்டணிக்கு வாய்ப்பு வழங்குங்கள்” என அன்வார் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் மக்களின் நலனுக்காக மத்திய அரசுடன் இணைந்து நம்பிக்கை கூட்டணி  செயல்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி  மொத்தமுள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset