நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைப்பூச செய்தித் துளிகள்: பக்தர்களுக்கு உதவ ஆயிரம் தன்னார்வலர்கள்

கோலாலம்பூர்:

தைப்பூசத்தையொட்டி, பத்து மலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பக்தர்களுக்கு உதவுவார்கள் என்று ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அரசாங்கம் வகுத்துள்ள SOPக்கள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 500 பேர் தன்னார்வலர்களாக பதிவு செய்து கொண்டுள்ளதாக அக்கோவில் கமிட்டியின் கௌரவ செயலாளர் சேதுபதி கூறினார்.

***    ***   ***   ***   ***    ****    

தைப்பூசத்திற்காக வகுக்கப்பட்டுள்ள SOPக்களில் தளர்வு அளிக்க வேண்டும் என பினாங்கு அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு மன்றத்துக்கு கடிதம் அனுப்பப்படும் என அம்மாநிலத்தில் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

***    ***   ***   ***   ***    ****   

தைப்பூசத்தை முன்னிட்டு அரசாங்கம் வகுத்துள்ள SOPக்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ள வேளையில், உரிய பரிந்துரைகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையிலேயே இந்த SOPக்கள் வகுக்கப்பட்டதாக தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சர் ஹலிமா சாதிக் கூறியுள்ளார்.

ஆலய நிர்வாகங்களிடம் இருந்து பரிந்துரைகள் கோரப்பட்டதாகவும், சுகாதார அமைச்சு அளித்த தொற்று தொடர்பான அபாய மதிப்பீடுகளைப் பெற்றும் SOPக்கள் இறுதி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Thaipusam 2021: Celebrations Cancelled in Penang - Penang Foodie

தொடர்புடைய செய்திகள்

+ - reset