நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைப்பூச தினத்தை பொது விடுமுறையாக கெடா மாநில அரசு அறிவிக்க வேண்டும்: டான்ஸ்ரீ நடராஜா வலியுறுத்து

பத்துமலை:

தைப்பூச தினத்தை பொது விடுமுறையாக  கெடா மாநில அரசு அறிவிக்க வேண்டும்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் தைப்பூச விழா வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இந்த தைப்பூச விழாவை முன்னிட்டு அன்றைய தினம் கெடாவில்  சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வேளையில் இந்த சிறப்பு விடுமுறையை அறிவித்த மாநில அரசுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விடுமுறையை வழங்குவதை விட தைப்பூச விழாவை கெடா மாநில அரசு நேரடியாக பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.

சிறப்பு விடுமுறையை காட்டிலும் பொது விடுமுறை நிலையானதாகும்.

மேலும் இந்த பொது விடுமுறை மாநில மக்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.

இவ்விடுமுறை மக்கள் தைப்பூச விழாவை கொண்டாடுவதற்கு வழிவகுக்கும்.

குறிப்பாக நாட்டின் இதர பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாடப்படும்  ஆலயங்களுக்கு செல்ல அவர்களுக்கு வசதியாக இருக்க வேண்டும்.

மேலும் தைப்பூச விழாவை முன்னிட்டு இதர மாநிலங்களுக்கும் பொது விடுமுறையை அறிவிக்க வேண்டும்.

ஆரம்பத்தில் இங்கும் பல சிக்கல்கள் இருந்தன.

ஆனால் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் கோரிக்கைக்கு ஏற்ப தைப்பூசத்தன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் தான் இக்கோரிக்கையை நான் முன்வைக்கிறேன்.

மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் கெடா மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ சனுசி தேவஸ்தானத்தின் கோரிக்கையை மறு ஆய்வு செய்வார் என தாம் நம்புவதாக டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset