நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆறு வயதில் முதலாம் வகுப்பு திட்டத்தை அமல்படுத்த பள்ளிகளும் ஆசிரியர்களும் தயார்: ஃபட்லினா

அலோர் ஸ்டார்:

ஆறு வயதில் முதலாம் வகுப்பு திட்டத்தை அமல்படுத்த பள்ளிகளும் ஆசிரியர்கள் தயாராக உள்ளனர்.

கல்வியமைச்சர்  ஃபட்லினா சிடேக் இதனை கூறினார்.

அடுத்தாண்டு முதல் மாணவர்கள் ஆறு வயதில் முதலாம் ஆண்டுக் கல்வியை தொடங்குவார்கள். ஆனால் இது கட்டாயம் அல்ல. 

அதேவேளையில் இதனை அமல்படுத்த தற்போதைய ஆசிரியர்கள், பள்ளிகள், வசதிகளின் எண்ணிக்கை போதுமானதாகும்.

இந்த நடவடிக்கையின் தேவையை அமைச்சு ஆய்வு செய்துள்ளதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் தற்போதுள்ள பணியாளர்கள் சேர்க்கையைக் கையாள போதுமானவர்கள் என்றும் கண்டறிந்துள்ளார்.

இந்த நடவடிக்கை கட்டாயமானது அல்ல, விருப்பத்தேர்வு என்றும், கூடுதல் மாணவர்களை ஏற்றுக்கொள்ள பொருத்தமான வசதிகள்,  ஆதரவு உள்ள பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset