நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லாலாமூவ் பையை பயன்படுத்தி நகைகளை கொள்ளையடித்த சம்பவம் மக்களை பீதியில் ஆழ்த்தியது

நீலாயில் லாலாமூவ் பையை பயன்படுத்தி கொள்ளையடித்த இருவரை காவல்துறையினர் வலைவீசி தேடல்

நீலாய் :

பண்டார் பாரு பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அமைந்துள்ள நகைக் கடையில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில், சுமார் 60,000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் இரண்டு நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், சந்தேகநபர்கள் லாலாமூவ் பையை பயன்படுத்தி நகைகளை எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் ஒருவர் துப்பாக்கியை வைத்திருந்தாலும், எந்தவித துப்பாக்கிச் சூடும் நடைபெறவில்லை என நீலாய் மாவட்ட காவல் தலைவர் ஜோஹாரி யஹ்யா தெரிவித்தார்.

முகமூடியும் தலைக்கவசமும் அணிந்திருந்த உள்ளூர் ஆடவர் என சந்தேகிக்கப்படும் இருவர், நீல நிற மோட்டார் சைக்கிளில் வந்ததாகவும், சம்பவ நேரத்தில் கடையில் இரண்டு பணியாளர்கள் மட்டுமே இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த கொள்ளைச் சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், வழக்கு ஆயுதச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பான தகவல்கள் உள்ளவர்கள் காவல்துறைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

- கிரித்திகா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset