நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

லெபோ அம்பாங்கில் அங்காடி கடைகள் உடைப்பு; பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் இல்லையென்றால் வழக்கு தொடரப்படும்: டத்தோ கலைவாணர்

கோலாலம்பூர்:

லெபோ அம்பாங்கில் அங்காடி கடைகள் உடைக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் இல்லையென்றால் வழக்கு தொடரப்படும்.

நம்பிக்கை அமைப்பின் தலைவர் டத்தோ டாக்டர் கலைவாணர் இதனை கூறினார்.

தலைநகர் லெபோ அம்பாங்கில் சம்பந்தப்பட்ட 6 அங்காடி கடைகள் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தன.

இக்கடைக்காரர்கள் அனைவரும் டிபிகேஎல் உரிமத்தை கொண்டுள்ளனர்.

அவர்கள் மின்சாரம், தண்ணீர் கட்டணத்தையும் செலுத்துகின்றனர்.

இந்நிலையில் அக்கடைகளுக்கு அருகில் உள்ள கட்டடத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடக்கிறது.

இதனால் இக்கடைகள் அனைத்தும் எந்தவொரு முன்னறிப்பும் இல்லாமல் உடைக்கப்பட்டுள்ளது.

கடைகள் இல்லாததால் இவ்வணிகர்கள் அனைவரும் வருமானம்  இன்றி தவித்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் தான் போலிஸ் புகார் செய்யப்பட்டது.

கூட்டரசு பிரதேச அமைச்சு, டிபிகேஎல், டத்தோ பண்டாருக்கு மகஜர் வழங்கப்பட்டது.

ஆனால் இன்று வரை எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கூட்டரசுப் பிரதேச அமைச்சராக ஹன்னா இயோ பொறுப்பேற்றுள்ளார்.

அதே போன்று டத்தோ பண்டாராகவும் புதியவர் பொறுப்பேற்றுள்ளார்.

இப்பிரச்சினையில் அவர்கள் தலையிட்டு உரிய தீர்வை வழங்க வேண்டும்.

அடுத்த 7 நாட்களுக்குள் அவர்கள் உரிய பதிலை வழங்க வேண்டும்.

இல்லையென்றால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சார்பாக வழக்கு தொடரப்படும் என்று டத்தோ கலைவாணர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset