நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூரில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மனிதவள அமைச்சு 116.22 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது: ஓன் ஹபிஸ்

ஜொகூர் பாரு:

ஜொகூரில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மனிதவள அமைச்சு 116.22 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

ஜொகூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காசி  இதனை கூறினார்.

இந்த ஒதுக்கீட்டில் பயிற்சி, திறன்களுக்கான நிதி, பணியாளர்களின் சந்தைப்படுத்தல், மாநிலத்தின் வேலை வாய்ப்பு சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

விவாதிக்கப்பட்ட ஒதுக்கீடுகளில் ஜொகூர் திறமை மேம்பாட்டு வாரியத்தை செயல்படுத்துவதை ஆதரிக்கப்படும்.

குறிப்பாக 20 மில்லியன் ரிங்கிட் எச்ஆர்டி கோர்ப்பின் சிறப்பு நிதியும் அடங்கும்.

தொழில்நுட்பப் பயிற்சிக்கான மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தின் வரி 13.02 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பணியாளர்களின் சந்தைப்படுத்தலை அதிகரிப்பதற்கான தொழில்துறை பயிற்சி திட்டமான 18.8  மில்லியன் ரிங்கிட் ஆகும்.

அதே நேரத்தில் மைமாஹிர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 1.4 மில்லியன் ரிங்கிட் டேலண்ட் கோர்ப் மூலம் வழங்கப்படுகிறது.

தொழில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கும் MyFutureJobs போர்ட்டலை வலுப்படுத்துவதற்கும் சொக்சோ நிறுவனத்திடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் வழங்கப்படுகிறது.

மேலும் ஜோகூரில் உள்ள தொழில்நுட்ப, தொழிற்கல்வி  திவேட் துறையில் 2,300 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு நிதி நிறுவனத்தால் 61 மில்லியன் ரிங்கிட்  கடன் நிதியுதவி வழங்கப்படுகிறது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், துணையமைச்சர் டத்தோ கைருல் பிர்டாவ்ஸ் அக்பர் கா ஆகியோரைச் சந்திப்பின் போது இது உறுதி செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset