நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நுரையீரல் தொற்று காரணமாக வீ கா சியோங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

கோலாலம்பூர்:

மசீச தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோங்கிற்கு நுரையீரல் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜனவரி 19ஆம் தேதி முழுமையான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் ஒரு வாரம் சிகிச்சை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்  இந்த காலகட்டத்தில், நான் மக்களவை அமர்விலும் கலந்து கொள்ள முடியாது.

இந்த விஷயம் குறித்து சபாநாயகருக்கும் தெரிவித்து விட்டேன்.

அதே நேரத்தில், முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான அழைப்புகளை நிறைவேற்ற முடியாததற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று டத்தோஶ்ரீ வீ கா சியோங் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset