நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குஸ்கோப்பின் கீழ் உள்ள இலாகா, நிறுவனங்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்: ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் (குஸ்கோப்) கீழ் உள்ள அனைத்து இலாகா, நிறுவனங்கள் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

குஸ்கோப் அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.

வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கான நினைவுப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது உட்பட, ஒவ்வொரு அதிகாரப்பூர்வ வணிகத்திலும் உள்ளூர் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அனைத்துலக சந்தையிலிருந்து நம்பிக்கையை எதிர்பார்க்கும் முன், மலேசியாவில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை ஊக்குவிப்பதில் அரசாங்கம் முக்கிய ஊக்கியாக இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.

தரத்தில் ஒப்பிடக்கூடிய உள்ளூ,  இருந்தால் மிகவும் பிரத்தியேகமான அல்லது பிராண்டட் என்று கருதப்படும் வெளிநாட்டு பிராண்டுகளின் நினைவுப் பொருட்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும்.

குஸ்கோப்பில் தொடங்கி தலைமை நிர்வாக அதிகாரி, தலைமைச் செயலாளர் , இது அமைச்சரின் உத்தரவு, அமைச்சகத்தின் கீழ் உள்ள எங்கள் அனைத்து துறைகள், நிறுவனங்கள் மலேசிய பிராண்ட் தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset