நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தம்புன் நாடாளுமன்றத் தொகுதியில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு உதவி நிதி: பிரதமர் வழங்குகிறார்

தம்புன்:

டிப்ளோமா அல்லது இளங்கலைக் கல்வியை தொடரவிருக்கும் பி40  மாணவர்கள் அல்லது தனி நபர்களுக்கு இன பாகுபாடின்றி தேவைப்படும் முழுத் தொகையையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்குகிறார்.

தொகுதியில் உள்ள மக்களுக்கு மட்டுமே  இந்த நிதி உதவியை வழங்குவதாக தம்புன் நாடாளுமன்றத் தொகுதிற்கான சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஷ்குமார் கூறினார்.

இங்குள்ள திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட்டது.

இந்த பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் எந்த பயிற்சியாக இருந்தாலும் அதற்கு தேவையான முழு தொகையும் வழங்கப்படும் என்று அதில் பயில விருக்கும் மாணவர்களுக்கு அங்கிகரிக்கப்பட்ட நிதி உதவிக்கான உத்தரவாத கடிதத்தை வழங்கியப் பின்னர் இதனைத் தெரிவித்தார்.

எஸ்.பி.எம். தேர்வை எழுதி முடித்தவர்களுக்கு மட்டும் அல்ல மாறாக தொழில் செய்து வருபவர்கள் தங்கள் மேல் கல்வியை தொடர ஆர்வம் உள்ளவர்கள் இந்த பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.

அதே வேளையில்  தம்புன் நாடாளுமன்ற சேவை அலுவலகத்திடம் உதவியை நாடலாம்.

இப்பல்கலைகத்தில் மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக டத்தோ சுரேஷ்குமார் நினைவுறுத்தினார் .

இதில் இந்தியர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளனர்.

இந்த திட்டத்தில் கல்வியை தொடர வழங்கப்படும் நிதியை திரும்ப செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்றார்.

இதனிடையே ஒன்றாம் படிவம் பயிலும் மாணவன் சஞ்ஜிவனுக்கு  மடிக்கணினி வழங்கப்பட்டது.

மேலும்  இரண்டு வயதில் ஏற்பட்ட கடுமையான காய்ச்சலின் விளைவாக, சஞ்ஜிவனுக்கு  ஏற்பட்ட பாதிப்பில்  இயற்கையாக சுவாசிக்க முடியாத நிலையில் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் வாழ்ந்து வருவதாகவும், மாணவனின் தாயார் நந்தினி தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset