நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூடா கட்சி மக்களுக்கு உதவுவதைக் கண்டு அஞ்சுவது ஏன்?: கேள்வி எழுப்பும் சையத்  சாதிக்

ஜோகூர்:

தமது சொந்தத் தொகுதியான மூவாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய அனுமதி மறுக்கப்பட்டதற்கு மூடா கட்சித் தலைவர் சையத் சாதிக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு உதவும் தமது கட்சியின் நடவடிக்கைகளைப் பார்த்து எதிர்த்தரப்பினர் அஞ்சுகிறார்களா என்று மூவார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் வெள்ளத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளையும், தங்கள் உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர்.

பல்வேறு தரப்பினரும் பொது மக்களுக்கு உதவி வரும் நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளைச் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ள மூடா கட்சியினர் முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

எனினும், இது தொடர்பாக அளித்த விண்ணப்பத்தை மூவார் மாவட்ட மன்ற அலுவலகம் ஏற்க மறுத்துவிட்டதாக சையட் சாதிக் கூறியுள்ளார். தங்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்பதற்கான காரணமும் விளக்கப்படவில்லை என அவர் சாடியுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூடா கட்சி உதவி செய்வதைக் கண்டு அஞ்சுவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில்தான், மூடா கட்சிக்கு  அரசியல் கட்சிக்கான அங்கீகாரம் அளிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு சங்கப்பதிவிலாகா (உள்துறை) அங்கீகாரக் கடிதத்தை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset