நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள புக்கிட் தாகர் பன்றிப் பண்ணை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: பிரதமர்

பாங்கி:

மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள புக்கிட் தாகர் பன்றிப் பண்ணை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை பரிந்துரைத்தார்.

புக்கிட் தாகரில் பெரிய அளவிலான பன்றி வளர்ப்புத் திட்டத்தை முதலில் ரத்து செய்ய வேண்டும்

இது குறித்து சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரியுடன் விவாதிக்கப்படும்

சுற்றுச்சூழல் காரணங்கள்,  புதிய பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு இன மக்களின் கவலைகள் இதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

மந்திரி புசாரிடம் எனது கருத்தைத் தெரிவிக்க, முடிந்தால் முதலில் திட்டத்தை ரத்து செய்ய உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

மேலும் நிபந்தனையுடன் முடிந்தால் சிறந்த விவகாரங்களை கருத்தில் கொள்வேன்.

பன்றி வளர்ப்பிற்கான தொழில்நுட்பம் நன்றாக இருந்தாலும், பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் ஒரு பகுதியில், அது நிச்சயமாகத் தொடரக்கூடாது.

இன்று பண்டார் பாரு பாங்கியில் உள்ள சூராவ் அல்-அமீனில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset