நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சீராட் அனைத்துலக மாநாடு சமுதாயத்தின் நம்பிக்கையாகும்: டத்தோ வீரா ஷாகுல்

கோலாலம்பூர்:

சீராட் அனைத்துலக மாநாடு சாதாரண மாநாடு அல்ல. சமுதாயத்தின் மிகப் பெரிய நம்பிக்கையாகும்.

முக்மின் சீராட் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் கூறினார்.

முக்மின் - மிம்கோய்ன் ஏற்பாட்டில் நடைபெறும் சீராட் அனைத்துலக வர்த்தகர் மாநாடு தலைநகரில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது.

கிட்டத்தட்ட 17 நாடுகளில் இருந்து 800 பேர் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

உலகளாவிய இந்திய முஸ்லிம் சமுதாய மக்களை இந்த மாநாடு ஒன்றிணைந்துள்ளது.

இதுவொரு சாதாரண மாநாடு அல்ல. அப்படியொரு சிந்தனையை யாரும் கொண்டிருக்க வேண்டாம்.

காரணம்  இந்த சீராட் சமுதாயத்தின் நம்பிக்கை. இளைஞர்களின் எதிர்காலம், சக்தியாகும்.

அதே வேளையில் சமுதாயத்தை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

உலகளாவிய நிலையில் உள்ள மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே இம்மாநாட்டின் நோக்கம்.

இந்த நோக்கம் சமுதாய மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்.

ஆக அடுத்த இரண்டு நாட்களுக்கு நடைபெறும் மாநாட்டில் அனைவரும் முழுமையாக கலந்து பயன் பெற வேண்டும் என்று அவர் டத்தோ வீரா ஷாகுல் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset