செய்திகள் மலேசியா
6ஆவது ஆண்டாக தூய்மையான தைப்பூசம் திட்டம்; 600 தொண்டூழியர்களுடன் மேற்கொள்ளப்படும்: விக்கி
பத்துமலை:
ஆறாவது ஆண்டாக தூய்மையான தைப்பூசம் திட்டம் 600 தொண்டூழியர்களுடன் மேற்கொள்ளப்படும்.
தூய்மையான தைப்பூசம் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் விக்கி கூறினார்.
தமிழ் கடவுள் திருமுருகப் பெருமானுக்கு வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி உலகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் மலேசியத் திருநாட்டில் புகழ்பெற்ற பத்துமலை திருத்தலத்தில் தைப்பூசம் மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படும்.
தைப்பூச விழாவின் போது சுத்தத்தை பேணி காக்கும் நோக்கில் தூய்மையாக தைப்பூசம் திட்டம் தொடங்கப்பட்டது.
நாட்டில் புகழ் பெற்ற Spritzer தண்ணீர் நிறுவனம் இத்திட்டத்திற்கு ஆதரவு தந்து வருகிறது.
மேலும் இவ்வாண்டும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம், மஹிமா, டிஎஸ்கே சமூக நல அமைப்பு இத்திட்டத்தில் இணைந்துள்ளது.
இது வெறும் சுத்தத்தை மட்டும் அல்லாமல், நீண்டகால சுற்றுச்சூழல் பொறுப்பை நோக்கி உறுதியான முன்னேற்றத்தை குறிக்கிறது என்று விக்கி கூறினார்.
க்ளீன் தைப்பூசத்தின் தாக்கம் ஏற்கனவே தெளிவாக காணப்படுகிறது.
2025 தைப்பூச விழாவின் போது, நூற்றுக்கணக்கான அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்களின் உதவியுடன், 320 கிலோகிராம் பிளாஸ்டிக் கழிவுகள் வெற்றிகரமாக சுத்தம் செய்யப்பட்டது.
முந்தைய ஆண்டுகளில் தைப்பூசத்திற்கு முன், போது மற்றும் பின் சுத்தத்தைப் பாதுகாப்பதே முக்கியமாக இருந்தது.
ஆனால் க்ளீன் தைப்பூசம் 2026 சுற்றுச்சூழல் பாதுகாப்பை பண்பாட்டும் ஆன்மீக மதிப்புகளின் ஒரு பகுதியாகக் கருதும் ஆழமான மாற்றத்தை குறிக்கிறது என்று ஒற்றுமை துறை துணையமைச்சர் யுனேஸ்வரன் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் குப்பைகள் வீசப்படுவதை தடுக்க தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக கடந்த ஆண்டு தைப்பூசத்தில் மூன்று டன் எடை காலணிகள் சுத்தம் செய்யப்பட்டது.
ஆக பத்துமலைக்கு வரும் பக்தர்கள் குப்பைகளை ஆங்காங்கே வீசக் கூடாது என்ற உறுதியுடன் வர வேண்டும்.
மக்கள் மனது வைத்தால் மட்டுமே குப்பைகள் இல்லாத தைப்பூச விழாவை கொண்டாட முடியும் என்று ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் அறங்காவலர், மஹிமா தலைவர் டத்தோ சிவக்குமார் கூறினார்.
Spritzer நிறுவனத்தின் விற்பனை பிரிவு நிர்வாகி ஷாவ் சான் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கலந்து சிறப்பித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 23, 2026, 10:34 pm
7 அமைச்சர்களின் புதிய அரசியல் செயலாளர்களின் பதவிப் பிரமாணம்: பிரதமரின் முன்னிலையில் நடைபெற்றது
January 23, 2026, 9:25 pm
எச்ஆர்டி கோர்ப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முகமது ஷாமிர் நியமனம்
January 23, 2026, 12:36 pm
பெர்மிம் பேரவை ஏற்பாட்டில் இந்திய முஸ்லிம் தொழில்முனைவோரை உருவாக்கும் பட்டறை
January 23, 2026, 12:30 pm
பினாங்கு தைப்பூச கொண்டாட்டங்களை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு இலவச ஃபெர்ரி சேவை
January 23, 2026, 11:29 am
மாற்றுத் திறனாளி ஓய்வூதியத்தை பெறுவதற்காக போலி ஆவணங்களை உருவாக்கும் கும்பலை சொக்சோ, எம்ஏசிசி முறியடித்தன
January 23, 2026, 9:19 am
