நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எச்ஆர்டி கோர்ப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முகமது ஷாமிர் நியமனம்

கோலாலம்பூர்:

எச்ஆர்டி கோர்ப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முகமது ஷாமிர் அப்துல் அஜிஸ் நியமிக்கப்பட்டார்.

அவரின் நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த 2025 ஜூலை மாதம் முதல் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த டாக்டர் சையத் அல்வி முகமது சுல்தான் பதவியில் இருந்து விலகினார்.

இதைத் தொடர்ந்து ஷாமிர் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

முகமது ஷாமிர் தனது புதிய பதவிக்கு ஏராளமான அனுபவங்களைக் கொண்டு வருகிறார்.

முன்பு அவர் அமானா இக்தியார் மலேசியாவின்  நிர்வாக இயக்குநராகப் பணியாற்றினார்.

அவரது தலைமையின் கீழ் அமானா இக்தியார் கிட்டத்தட்ட 99.98% சரியான திருப்பிச் செலுத்தும் விகிதத்தை அடைந்தது.

2025 இல் முழுமையான 100% திருப்பிச் செலுத்தும் விகிதத்தை எட்டியது.
அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதிலும், உள்ளடக்கிய சமூக, பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவதிலும் அவரது பதவிக்காலம் வெற்றி பெற்றது.

திறன் மேம்பாடு, பணியாளர் பயிற்சி, மனித மூலதன நிலைத்தன்மை ஆகியவற்றில் எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் கவனத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னோட்ட நடவடிக்கையாக அவரது நியமனம் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்புதிய பொறுப்புக்கான நியமனக் கடிதம் இன்று புத்ராஜெயாவில் உள்ள  மனிதவள அமைச்சில் அவரிடம்  முறையான ஒப்படைக்கப்பட்டது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இக்கடிதத்தை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset