நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டான்ஸ்ரீ நிர்வகிக்கும் முதலீட்டு மோசடி திட்டத்தால் 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்: டான்ஸ்ரீ அசாம் பாக்கி

கோலாலம்பூர்:

டான்ஸ்ரீ  நிர்வகிக்கும் முதலீட்டு மோசடி திட்டத்தால் 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி இதனை கூறினார்.

டான்ஸ்ரீ என்ற முக்கிய நபரால் நிர்வகிக்கப்பட்ட முதலீட்டு மோசடி தொடர்பான ஆரம்ப விசாரணைகளில் குறைந்தது 1,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட அனைவரும் 2021, 2024 க்கு இடையில் இரண்டு நிறுவனங்களில் முதலீடு செய்ததாக நம்பப்படுகிறது.

அவர்களில் சிலர் பெரிய தொகைகளை முதலீடு செய்து லாபகரமான வருமானத்தை எதிர்பார்க்கிறார்கள்.

அந்த அடிப்படையில் எம்ஏசிசி  விசாரணை நடத்தியது. ஏனெனில் அதில் அதிக அளவு பணம் சம்பந்தப்பட்டிருந்தது.

உண்மையில், இந்த வழக்கு பொது நலன் சம்பந்தப்பட்டது என்பதால், விசாரணையை தொழில் ரீதியாகவும் உறுதியாகவும் நடத்த எம்ஏசிசி உறுதி கொண்டுள்ளது என்று அவர் இன்று இங்கு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset