நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

7 அமைச்சர்களின் புதிய அரசியல் செயலாளர்களின் பதவிப் பிரமாணம்: பிரதமரின் முன்னிலையில் நடைபெற்றது

புத்ராஜெயா:

புதிய அரசியல் செயலாளர்களின் பதவிப் பிரமாணம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் நடைபெற்றது.

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரியும் இதில் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் ஏழு புதிய அரசியல் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் நிர்வாக இயந்திரத்தை வலுப்படுத்தி அந்தந்த அமைச்சுகளில் மடானி அரசாங்க நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதை ஆதரிக்க வேண்டும்.

நியமனம் பெற்ற அரசியல் செயலாளர்கள் பின்வருமாறு:

நோராஷக்கின் பிந்தி யூசோப்
தோட்டத்துறை, மூலப் பொருட்கள் அமைச்சரின் அரசியல் செயலாளர்

வில்லி லியோங் @ ரஃபிகி ஹெல்மி
இயற்கை வள சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சரின் அரசியல் செயலாளர்

ஹைசுடின் அப்துல் கபால்
மனிதவள அமைச்சரின் அரசியல் செயலாளர்

முகமது ஹபிஸ் முகமது
பொருளாதார அமைச்சரின் அரசியல் செயலாளர்

அஹ்மத் நஜிப் பின் ஜோஹாரி
பிரதமர் துறை (சபா, சரவா விவகாரங்கள்) அமைச்சரின் அரசியல் செயலாளர்

முகமது கமாருல் அரிபின்
பிரதமர் துறை (மத விவகாரங்கள்) அமைச்சரின் அரசியல் செயலாளர்

முகமது ஹபிக் ஹஸ்வான்
இளைஞர், விளையாட்டு அமைச்சரின் அரசியல் செயலாளர்

இந்த நியமனம் மதானி அரசாங்கத்தின் பயனுள்ள, தொழில்முறை, நேர்மை சார்ந்த அரசியல் ஆதரவை வலுப்படுத்துவதை உறுதி செய்வதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

நியமிக்கப்பட்ட அனைத்து அரசியல் செயலாளர்களும் இந்த நம்பிக்கையையும் பொறுப்பையும் முழு அர்ப்பணிப்பு, நேர்மை, மடானி மலேசியாவின் அபிலாஷைகளுக்கு ஏற்ப நிறைவேற்றுவார்கள் என்று அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset