நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடைசி நேரத்தில் காவடிகளுக்கு அனுமதி மறுப்பது நியாயமல்ல

கோலாலம்பூர்:

தைப்பூசத்தின்போது காவடிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என காவடி தயாரிப்பவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு மாதம் காத்திருந்து காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் பெரும் ஏமாற்றமும் வருத்தமும் அடைவர் என்றும் ஒரு தரப்பினர் கூறியுள்ளனர்.

தைப்பூசத்துக்கு சில தினங்களே இருக்கும் வேளையில், அரசாங்கம் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் நஷ்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என காவடி தயாரிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில், ஒவ்வொரு காவடிக்கும் தாங்ளும் பக்தர்களும் ஆயிரக்கணக்கில் செலவிட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Kavadi maker hooked on the art | The Star

கடைசி தருணத்தில் அரசாங்கம் இவ்வாறு அறிவிப்பது நியாயமல்ல என்கிறார் பேராக் kavadi bearers alliance தலைவர் இருதயம் செபாஸ்தியர் தெரிவித்துள்ளார்.

"காவடி தயாரிப்பாளர்களும் அவற்றை வாங்கும் பக்தர்களும் 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தயாராகிவிட்டனர். கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் அரசாங்கம் தடை விதித்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஜனவரி 13ஆம் தேதி திடீரென அறிவிக்கின்றனர்.

"மேலும், மனிதவள அமைச்சர் தைப்பூசம் வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவித்திருந்ததும் நம்பிக்கை ஊட்டியது. ஒவ்வொரு காவடிக்கும் 20 ஆயிரம் வெள்ளி செலவிடுபவர்கள் உள்ளனர்.  

"காவடியில் LED விளக்குகள் பொருத்துவது, வர்ணம் பூசுவது, மயிலறகுகள் வைப்பது என பல வேலைகள் உள்ளன. அவற்றைச் செய்து முடிக்க பல நாள்கள் ஆகும். காவடிகளை பாதுகாத்து வைத்து அடுத்த ஆண்டு பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு இல்லை. அவற்றில் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் அதுவரை தாக்குபிடிக்காது. எனவே, அளவில் பெரிய காவடிகளுக்காவது அனுமதி அளிக்க வேண்டும்," என இருதயம் செபாஸ்தியர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset