நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீலாய் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை வழங்கப்பட்டது: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

நீலாய் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கப்பட்டது.

சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை கூறினார்.

2026ஆம் ஆண்டுக்கான பள்ளித் தவணை கடந்த வாரம் தொடங்கியது.

இதனை அடிப்படையாக கொண்டு நீலாய் தொகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கப்பட்டது.
 
இதன் மூலம் தமிழ்ப்பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் பயன் பெற்றனர்.

நீலாய் சட்டமன்றத் தொகுதியில் மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திட்டங்களுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது புத்தக பைகள் வழங்கப்படுகிறது என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset