நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தகவல்களைப் பெற எம்ஏசிசி, வருமான வரி அதிகாரிகள் அலுவலகத்திற்கு வந்ததை ஐஜேஎம் நிறுவனம் உறுதிப்படுத்தியது

கோலாலம்பூர்:

எம்ஏசிசி, உள்நாட்டு வருவாய் வாரியம் அதிகாரிகள் தங்கள் செயல்முறையின் ஒரு பகுதியாக தகவல்களைப் பெற  நிறுவனத்தின் அலுவலகத்திற்கு வந்தனர்.

ஐஜேஎம்  கார்ப்பரேஷன் பெர்ஹாட் இதனை உறுதிப்படுத்தியது.

புர்சா மலேசியாவிற்கு தாக்கல் செய்த மனுவில், அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஐஜேஎம் நிறுவன நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, நேர்மை ஆகியவற்றின் வலுவான தரங்களை நிலைநிறுத்துவதற்கு உறுதி கொண்டுள்ளது.

எங்கள் வணிக நடவடிக்கைகள் வழக்கம் போல் இயங்கும் என்பதை எங்கள் பங்குதாரர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்.

இந்த விஷயத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வரும்.

மேலும் ஏதேனும் குறிப்பிடத்தக்க புதுப்பிப்புகள் இருந்தால் சரியான நேரத்தில் வெளிப்படுத்தல்களை வெளியிடும் என்று அந்நிறுவனம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset