நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரஹ்மா உதவித் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படும்: நிதியமைச்சு

புத்ராஜெயா:

ரஹ்மா உதவித் தொகை இன்று முதல் விநியோகிக்கப்படும் என்று நிதியமைச்சு கூறியது.

அரசாங்கம் இன்று முதல் 2026ஆம் ஆண்டுக்கான உதவித் தொகை பங்களிப்பின்  கட்டம் 1ஐ விநியோகிக்கத் தொடங்கும்.

இதற்காக அரசாங்கம் 1.1 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.

இந்தத் தொகை 3.7 மில்லியன் குடும்பங்களுக்கும் 1.3 மில்லியன் ஒற்றை மூத்த குடிமக்களுக்கும் பயனளிக்கும்.

தகுதி பெறுபவர்களுக்கு அந்தந்த தகுதி வகைகளுக்கு ஏற்ப 100 முதல் 500 ரிங்கிட் வரை வழங்கப்படும்.

இந்த முயற்சி வாழ்க்கைச் செலவின் சுமையை மிகவும் திறம்படக் குறைக்கும் என்பதை உறுதி செய்வதற்கான மடானி அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப, இந்த ஆண்டுக்கான ரஹ்மா, சாரா மானியங்களை அரசாங்கம் மறுசீரமைத்துள்ளது.

இதன் அடிப்படையில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மாதாந்திர அடிப்படையில் சாரா உதவியைப் பெறத் தகுதியுடையவர்கள்.

இதில் eKasih தரவுத்தளத்தின் அடிப்படையில் ஏழைகள், மிகவும் ஏழைகளிடமிருந்து 400,000 பேர் அடங்குவர் என்று நிதிகமைச்சு கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset