செய்திகள் கலைகள்
44 வயதில் தான் உங்களுக்கான வாழ்வு தொடங்குகிறது: ஓப்ராவின் அறிவுரைக்கு ஆமென் என பதிவிட்ட த்ரிஷா
சென்னை:
ஊடகங்களில் சமூக, பெண்ணிய வாதங்களை வெளியிட்டு பிரபலமடைந்து வரும் ஓப்ரா வின்ஃபிரேவின், 44 வயதில் வாழ்வு தொடங்குகிறது என்ற அறிவுரைக்கு ஆமென் என பதிவிட்டு ஷேர் செய்திருக்கிறார் நடிகை த்ரிஷா.
நடிகை த்ரிஷா, கடந்த மே 4ஆம் தேதி தன்னுடைய 43வது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்த நிலையில், இந்த பதிவை ஷேர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஓப்ரா வின்ஃப்ரேவின் வயது, தன்னை அறிதல், மன வளர்ச்சி உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஒரு காணொலி வெளியிட்டிருந்தார். கிகி பால்மரின் பாட்காஸ்ட் ஒன்றில், கிகி பால்மர், நீங்கள் உங்கள் வாழ்வின் எந்தக் காலக்கட்டத்தை மீண்டும் வாழ விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து உங்களது 30வது வயதிலா என்று தொடர்ந்து கேள்வி கேட்க, இல்லை, நான் எனது 30வது வயதில் வாழ விரும்பவில்லை. நான் என்னுடைய 44வது வயதை எடுத்துக் கொள்கிறேன். உண்மையில் வாழ்வு 44வது வயதில்தான் தொடங்குகிறது என்று நான் கருதுகிறேன் என பதிலளித்தார்.
இந்த விடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ஆமென் என ஒற்றை வார்த்தையை பதிவிட்டிருக்கிறார் நடிகை த்ரிஷா.
இது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
