செய்திகள் மலேசியா
இஸ்ரேல் நாட்டு பயண ஆவணத்தை மலேசியா அங்கீகரிக்காது: உள்துறை அமைச்சு திட்டவட்டம்
புத்ராஜெயா-
மலேசியாவில் நுழைய இஸ்ரேல் நாட்டு பயண ஆவணத்தை மலேசியா அங்கீகரிக்காது என்று நாட்டின் உள்துறை அமைச்சு திட்டவட்டமாக தெரிவித்தது
மலேசியாவின் வெளியுறவு கொள்கையில் இஸ்ரேல் நாட்டுடன் எந்தவொரு அரச தந்திர உறவும் மலேசியா கொண்டிருக்கவில்லை என்று உள்துறை அமைச்சு விளக்கம் அளித்தது
மலேசியாவின் பாதுகாப்பு, பொது அமைதி மற்றும் முக்கியத்துவத்திற்கு சிக்கல் விளைவிக்க நேர்ந்தால் அவர்கள் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அமைச்சு தெளிவுப்படுத்தியது.
நாட்டின் நலன்களையும் பாதுகாப்பையும் பேணிக்காக்கும் அதே வேளையில், பாலஸ்தீனிய மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மடானி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு இந்த நிலைப்பாடு இணங்குகிறது என பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்
தேசிய குடிநுழைவு துறை தொடர் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
1959/1963 ஆம் ஆண்டு குடிநுழைவு சட்டம், 1966 ஆம் ஆண்டு கடப்பிதழ் சட்டம், தற்போது நடைமுறையில் உள்ள குடிநுழைவு விதிமுறைகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு முகமைகளின் பாதுகாப்பு மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், மலேசியாவிற்குள் வெளிநாட்டினர் நுழைவது தொடர்பான அனைத்து சட்ட விதிகளையும் தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 3:15 pm
மாரானில் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சாலை விபத்து: மூவர் பலி, இருவர் படுகாயம்
July 28, 2026, 12:39 pm
கூலிமில் மூன்று தொழிற்சாலைகளில் தீ விபத்து: விசாரணை தொடர்வதாக கெடா தீயணைப்பு துறை தகவல்
July 28, 2026, 12:28 pm
நம்பிக்கை கூட்டணி நிர்வாகச் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கிறது; பதவிகளுக்கு அல்ல: ஸ்டீவன் சிம்
July 28, 2026, 12:26 pm
