நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் மாநில முன்கூட்டியே வாக்களிப்பு நிலவரம்: மதியம் 2 மணி வரை 86.40 விழுக்காடு வாக்குகள் பதிவு 

சிரம்பான் - 

16ஆவது நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலின் முன்கூட்டியே வாக்களிப்பு நடந்து வருகிறது 

இந்நிலையில் மதியம் 2 மணிவரை மொத்தமுள்ள 16,467 வாக்காளர்களில் 14,228 பேர் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றிவிட்டதாக மலேசியத் தேர்தல் ஆணையம் கூறியது 

தற்போது 86.40 விழுக்காடு வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர். 

அரச மலேசிய போலிஸ் படை, பொது செயல்பாட்டு படை பி.ஜி.ஏ மற்றும் அவர்களின் துணைவியர்களும்  கிட்டத்தட்ட அதிகளவில் வாக்குகளைப் பதிவு செய்தனர். 

கடந்த 2023 நெகிரி மாநில சட்டமன்ற தேர்தலில் 59.80 விழுக்காடு தான் முன்கூட்டியே வாக்களிப்பில் பதிவுசெய்யப்பட்டது. 

16வது நெகிரி செம்பிலான் மாநில தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்களிப்பு செயல்முறை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. 

இதில், முன்கூட்டியே வாக்களிக்கத் தகுதியுள்ள PDRM, PGA, ATM உறுப்பினர்கள் மற்றும் அவர்களது துணைவியர்கள் ஈடுபட்டனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset