செய்திகள் மலேசியா
சனூசி, ரெம்பாவ் அம்னோ தலைவரைப் போலிஸ் விரைவில் அழைக்கும்: நெகிரி செம்பிலான் மாநில போலிஸ் தலைவர் அல்சஃப்னி அஹ்மத் தகவல்
சிரம்பான் -
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அறிக்கையை வெளியிட்டதாக கூறப்படும் கெடா மாநில மந்திரி பெசார் சனூசி நோர், ரெம்பாவ் அம்னோ தலைவர் ஒருவர் விரைவில் போலிஸ் விசாரணைக்காக அழைக்கப்படுவார்கள்.
இந்த தகவலை நெகிரி செம்பிலான் மாநில போலிஸ் தலைவர் அல்சஃப்னி அஹ்மத் கூறினார்.
இதுவரை ஒன்றுக்கும் மேற்பட்ட சாட்சியாளர்கள் வாக்குமூலம் வழங்கிவிட்ட நிலையில் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
1998 தொடர்பு பல்லூடக சட்டத்தின் செக்ஷன் 233 மற்றும் செக்ஷன் 505(b)இன் கீழ் இந்த சம்பவம் விசாரணை செய்யப்படுகிறது.
முன்னதாக, தேசிய கூட்டணியின் தேர்தல் இயக்குநரான சனூசி நோர் அவர்கள், இனவாத அடிப்படையில் கூற்றை வெளியிட்டதாக அவருக்கு எதிராக நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்தன.
அதுமட்டுமல்லாமல் நெகிரி செம்பிலான் அரண்மனையை உட்படுத்தியதாக கூறப்படும் அம்னோ தலைவரின் கூற்றையும் போலிஸ் விசாரணை செய்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை போலிஸ் 11 புகார்களைப் பெற்றதாக அவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 3:45 pm
இஸ்ரேல் நாட்டு பயண ஆவணத்தை மலேசியா அங்கீகரிக்காது: உள்துறை அமைச்சு திட்டவட்டம்
July 28, 2026, 3:15 pm
மாரானில் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சாலை விபத்து: மூவர் பலி, இருவர் படுகாயம்
July 28, 2026, 12:39 pm
கூலிமில் மூன்று தொழிற்சாலைகளில் தீ விபத்து: விசாரணை தொடர்வதாக கெடா தீயணைப்பு துறை தகவல்
July 28, 2026, 12:28 pm
நம்பிக்கை கூட்டணி நிர்வாகச் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கிறது; பதவிகளுக்கு அல்ல: ஸ்டீவன் சிம்
July 28, 2026, 12:26 pm
