செய்திகள் மலேசியா
மாரானில் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சாலை விபத்து: மூவர் பலி, இருவர் படுகாயம்
மாரான்:
இன்று அதிகாலையில் ஒரு காரும் மற்றொரு எம்.பி.வி ரக காரும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே பலியான வேளையில் இருவர் படுகாயமடைந்தனர்.
இந்த சாலை விபத்து கம்போங் பாயா பாசீர் அருகிலுள்ள ஜாலான் மாரான் - தெமெர்லோ சாலையில் காலை 5.40 மணியளவில் நிகழ்ந்தது
பாதிக்கப்பட்ட காரில் இரு பெண்களும் மற்றொரு எம்.பி.வி ரக காரில் மூன்று ஆண்களும் பயணம் செய்தனர்
கார் தெமர்லோவிலிருந்து மாரனுக்குச் சென்று கொண்டிருந்தது, அதே சமயம் அந்த எம்.பி.வி. எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தது.
இரு வாகனங்களும் மோதிக்கொண்டதில், காரின் ஓட்டுநர் மற்றும் பயணி, மற்றும் எம்பிவி வாகனத்தின் ஒரு பயணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
இந்த தகவலை பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப்படையின் துணை இயக்குநர் முஹம்மத் சலாஹிடின் இசா கூறினார்.
காரின் உள்ளே சிக்கிக்கொண்டிருந்தவர்களை சிறப்பு உபகரணங்கள் கொண்டு தீயணைப்பு மீட்புப்படையினர் மீட்டனர்.
பலியான உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக சுல்தான் ஹஜி அஹ்மத் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 3:45 pm
இஸ்ரேல் நாட்டு பயண ஆவணத்தை மலேசியா அங்கீகரிக்காது: உள்துறை அமைச்சு திட்டவட்டம்
July 28, 2026, 12:39 pm
கூலிமில் மூன்று தொழிற்சாலைகளில் தீ விபத்து: விசாரணை தொடர்வதாக கெடா தீயணைப்பு துறை தகவல்
July 28, 2026, 12:28 pm
நம்பிக்கை கூட்டணி நிர்வாகச் செயல்திறனுக்கு முன்னுரிமை அளிக்கிறது; பதவிகளுக்கு அல்ல: ஸ்டீவன் சிம்
July 28, 2026, 12:26 pm
