நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெனாரா மெர்டேக்கா 118 கட்டிடம் இனி மெனாரா மெர்டேக்கா மேபேங்க் என பெயர்மாற்றம் கண்டுள்ளது 

கோலாலம்பூர்: 

கோலாலம்பூரில் உள்ள 118 மாடி கொண்ட புகழ்ப்பெற்ற மெனாரா மெர்டேக்கா 118  கட்டிடம் இனி மெனாரா மெர்டேக்கா மேபேங்க் கட்டிடமாக பெயர்மாற்றம் கண்டுள்ளது. 

உலகிலேயே இரண்டாவது மிக உயர்ந்த கட்டடமான இந்தக் கோபுரத்தில், முதன்மை வாடிக்கையாளராக மாறியதைத் தொடர்ந்து மேபேங்க் தனது தலைமையகத்தை கடந்த மே மாதம் அங்கு மாற்றியது.

ஜாலான் துன் பேராக் பகுதியில் அமைந்துள்ள மேபேங்கின் பழைய தலைமையகம் மெனாரா துன் பேராக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மேபேங்க் மலேசியா தெரிவித்துள்ளது. 

இந்த இரண்டு கட்டடங்களின் பெயர் மாற்றங்களும் உடனடியாக இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமையகமான மெனாரா மெர்டேக்கா  மேபேங்க் கோபுரத்தில் வங்கி 33 தளங்களைக் கொண்டுள்ளது.

இதன் மூலம் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கென பிரத்யேக நுழைவாயிலுடன் சுமார் 7,000 ஊழியர்கள் அங்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்தக் கோபுரமானது PNB நிறுவனத்திற்குச் சொந்தமான PNB மெர்டெக்கா  வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனம் மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset