நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மித்ராவின் திட்டங்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பெரும் பயனாக உள்ளது; விரைவில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்

செனவாங்:

மித்ரா அமலுக்கு கொண்டு வந்துள்ள திட்டங்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பெரும் பயனாக உள்ளது.

மனிதவள அமைச்சரும் மித்ரா தலைவருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நலன் மேம்பாட்டிற்காக மித்ரா பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

மடானி பள்ளி தளவாடப் பொருட்கள் திட்டம், கல்வி மடானி எனும் டியூசன் வகுப்புத் திட்டம், தமிழ்ப்பள்ளிக்கான ஸ்மார்ட் போர்ட் திட்டம் ஆகியவை இதில் அடங்கும்.

இத்திட்டங்கள் தற்போது தமிழ்ப்பள்ளிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டங்கள் அனைத்தும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பெரும் பயனாக உள்ளது.

செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களை நேரடியாக சந்தித்து நான் கண்டறிந்தேன் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

கல்வி மடானி திட்டத்தின் கீழ் மாணவர்கள் டியூசன் வகுப்புகளில் பங்கேற்று வருகின்றனர்.

இதில் மாணவர்கள் போக்குவரத்துப் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வு காணப்படும் என்று அவர் கூறினார்.

மித்ராவின் கீழ் அடுத்தடுத்து பல்வேறு திட்டங்கள் அறிமுகம் காணவுள்ளது.

தற்போதைய தேர்தல் காலத்தில் அதை அறிவிக்க முடியாது. இருந்தாலும் அத்திட்டங்கள் அனைத்தும் விரைவில் அறிவிக்கப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்









தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset