செய்திகள் மலேசியா
பிரதமரின் உத்தரவுக்கு இணங்க உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: டத்தோஸ்ரீ ரமணன்
செனவாங்:
பிரதமர் உத்தரவுக்கு இணங்க உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுக் காணப்படும்:
மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.
அண்மையில் பினாங்கில் நடந்த நிகழ்ச்சியில் உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு ஒரு மாதத்தில் தீர்வு காண வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
பிரதமரின் இந்த உத்தரவைத் தொடர்ந்து மனிதவள அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இன்று கூட வங்காளதேச அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.
அடுத்த 20 நாட்களுக்குள் இந்த அமைச்சின் நடவடிக்கைகளை முடித்து விட்டு உள்துறை அமைச்சிடம் நாங்கள் ஒப்படைத்து விடுவோம்.
எது எப்படி இருந்தாலும் உணவகத் துறைக்கு முழுமையாக அந்நியத் தொழிலாளர்கள் வழங்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்காகும்.
ஆக அதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 28, 2026, 5:03 pm
மெனாரா மெர்டேக்கா 118 கட்டிடம் இனி மெனாரா மெர்டேக்கா மேபேங்க் என பெயர்மாற்றம் கண்டுள்ளது
July 28, 2026, 3:45 pm
இஸ்ரேல் நாட்டு பயண ஆவணத்தை மலேசியா அங்கீகரிக்காது: உள்துறை அமைச்சு திட்டவட்டம்
July 28, 2026, 3:15 pm
மாரானில் இரு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சாலை விபத்து: மூவர் பலி, இருவர் படுகாயம்
July 28, 2026, 12:39 pm
