செய்திகள் உலகம்
கழிவறை கிண்ணத்தில் நிரப்பப்பட்ட சோடா பானத்தை விரைந்து குடிக்கும் போட்டி: பொதுமக்கள் கண்டனம்
மாஸ்கோ-
ரஷ்யாவில் உள்ள ஒரு ஷாப்பிங் மையம், கழிவறை கிண்ணத்தில் நிரப்பப்பட்ட சோடா பானத்தை மிகக் விரைவாகக் குடித்து முடிக்கும் போட்டியை நடத்தியதற்காக பொதுமக்களின் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவருக்கு 1,200 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று 'இன்கோர்' செய்தி தளம் தெரிவிக்கிறது.
Game of Thrones என்று பெயரிடப்பட்ட இந்தப் போட்டி, சமீபத்தில் ஸ்டாவ்ரோபோல் நகரில் நடைபெற்றது.
'@wildemation.news' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், போட்டியாளர்கள் கழிவறை கிண்ணத்தில் ஊற்றப்பட்ட சோடா பானத்தை அவசரமாகக் குடிக்க முண்டியடிப்பது பதிவாகியுள்ளது.
உள்ளூர் செய்தியாளர் அலெக்சாண்டர் நெவ்சோரோவ், பணம் கிடைத்தால் மக்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதை இந்த வீடியோ கிளிப் காட்டுவதாகத் தெரிவித்தார்.
இந்த வீடியோ 3,100-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்று, மக்களிடையே பல்வேறு வகையான எதிர்வினைகளையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
