செய்திகள் மலேசியா
மலாக்கவில் கடுமையான வெள்ளம்
மலாக்கா:
மலக்காவில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 10 மணி நிலவரப்படி 37 குடும்பங்களைச் சேர்ந்த 124 பேராக உயர்ந்துள்ளது.
மூன்று தற்காலிக நிவாரண மையங்கள் இன்னும் மலக்கா தெங்கா, ஜாசினில் இயங்கி வருகின்றன.
சமூக நலத் துறை (ஜேகேஎம்) பேரிடர் தகவல் போர்டல், பாதிக்கப்பட்டவர்கள் மலக்கா தெங்காவில் உள்ள பந்தாய் குண்டோர் மாநில சட்டமன்ற மேம்பாட்டு ஒருங்கிணைப்புக் குழு (ஜப்பரூன்) மண்டபத்திலும், ஜாசினில் உள்ள செகோலா கெபாங்சான் (எஸ்கே) செர்காம் தரத், எஸ்கே புக்கிட் டெம்பாகாவிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மலாக்கா தெங்காவில், 17 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேர் பந்தாய் குண்டோர் ஜாபெருன் ஹாலில் தஞ்சம் அடைந்துள்ளனர். அதே சமயம், 12 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் எஸ்.கே. செர்கம் டாரட்டிலும், எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் ஜாசினில் உள்ள எஸ்.கே. புக்கிட் தெம்பக்காவ்விலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 88 பெரியவர்கள், 34 குழந்தைகள், இரண்டு பச்சிளங்குழந்தைகள் அடங்குவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 10:52 am
மலேசியர்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி காணப்படும்: பிரதமர் அன்வார் உறுதி
July 25, 2026, 12:44 pm
திரெங்கானு மாநில ஆட்சியாளர் சுல்தான் மிஸான் நலமுடன் உள்ளார்: திரெங்கானு அரண்மனை தகவல்
July 25, 2026, 12:43 pm
