செய்திகள் விளையாட்டு
பிபா தலைவர் பதவி விலக வேண்டும்: டெபாஸ்
மாட்ரிட்:
உலகக் கிண்ண போட்டியில் 64 அணிகளாக விரிவுபடுத்தும் திட்டத்தைத் தொடர்ந்து பிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ பதவி விலக வேண்டும்.
லா லீகா தலைவர் ஜேவியர் டெபாஸ் இந்த அழைப்பு விடுத்துள்ளார்.
உலக கால்பந்து நிர்வாக அமைப்பானது, கால்பந்து சூழலமைப்பை மேலும் மேலும் சேதப்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பிபா வை வெளிப்படையாக விமர்சிப்பதற்காக அறியப்பட்ட டெபாஸ்,
48 நாடுகள் பங்கேற்ற முதல் உலகக் கிண்ணம் 2026 உலகக் கிண்ண போட்டி முடிவடைந்த பின்னர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அந்த உலகக் கிண்ணம் பல்வேறு சர்ச்சைகளால் களங்கப்படுத்தப்பட்டது.
அமெரிக்க வீரர் ஃபோலரின் பலோகுனின் இடைநீக்கம் தொடர்பான வழக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையீடு, இறுதிப் போட்டியில் 27 நிமிட இடைவேளை, குளிரூட்டப்பட்ட மைதானத்தில் போட்டி நடைபெற்றபோதிலும் நீர் அருந்தும் இடைவேளைகள் பயன்படுத்தப்பட்டது ஆகியவை கவனத்தை ஈர்த்துள்ள பிரச்சினைகளில் அடங்கும்.
ஆக பிபாவின் தலைமைப் பொறுப்பில் பத்தாண்டுகளுக்குப் பிறகு இன்ஃபான்டினோ பதவி விலக வேண்டுமா என்று கேட்கப்பட்டபோது, டெபாஸ் தனது பதிலை மறைக்கவில்லை.
ஆம். அவர் பதவி விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 23, 2026, 11:24 am
லிவர்புல் எஃப் சி அணியின் பங்குகளை வாங்க உலகின் நான்காவது பணக்காரர் பெஸொஸ் ஆர்வம்
July 23, 2026, 9:21 am
காசெமிரோவின் இன்டர்மியாமி அணிக்கான இடமாற்றம் குறித்து எம்எல்எஸ் விசாரித்து வருகிறது
July 22, 2026, 8:35 am
இந்த வலி மிகவும் கடுமையானது: ஸ்பெயின் உடனான தோல்வி குறித்து மெஸ்சி உருக்கம்
July 21, 2026, 5:21 pm
மலேசிய காற்பந்து லீக் 2026-2027 போட்டி: ஆகஸ்ட் 21ஆம் தேதி அதிகாரப்பூர்வம்காக தொடங்குகிறது
July 21, 2026, 9:36 am
