நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லிவர்புல் எஃப் சி அணியின் பங்குகளை வாங்க உலகின் நான்காவது பணக்காரர் பெஸொஸ் ஆர்வம் 

லண்டன் - 

லிவர்புல் எஃப் சி அணியின் பங்குகளை வாங்குவதில் உலகின் நான்காவது பணக்காரரான ஜெஃப் பெஸொஸ் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 

அமசோன் நிறுவனத்தின் தோற்றுநரான பெஸொஸ் 256 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பை கொண்டுள்ளார். 

லிவர்பூலில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் குழு ஒன்று பெசோஸைத் தொடர்பு கொண்டது என்று ஸ்காய் நியுஸ் ஊடகத்தின் செய்தி ஆசிரியர் மார் க்ளைன்மென் கூறினார். 

பெஸொஸ் இதுவரை எந்தவொரு விளையாட்டு அணிகள் மீது முதலீடுகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. இதற்கு முன் கூடைப்பந்து அணிகள் மீது அவர் ஆர்வம் காட்டுவதாக வெளியான தகவலை அவரின் தரப்பு முற்றிலுமாக மறுத்தது. 

லிவர்புல் எஃப் சி அணியின் 30 விழுக்காடு பங்குகளை வாங்க அமித் பத்தியா குழுமம் முனைப்பு காட்டி வரும் நிலையில் அதற்கு நிதி ஆதரவளிக்க பெஸொஸிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. 

இருப்பினும், எதுவும் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

லிவர்புல் எஃப் சி அணியின் மதிப்பானது 4.6 பில்லியன் பவுன்ட் ஆகும் என்று மதிப்பிடப்படுகிறது. 

உலகிலேயே நான்காவது மதிப்புமிக்க காற்பந்து கிளப்பாக இங்கிலாந்து நாட்டின் லிவர்புல் எஃப் சி அணி விளங்குகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset