
செய்திகள் மலேசியா
தைப்பிங்கில் தடுப்புக் காவலில் இருந்த ஆடவர் மரணம்
தைப்பிங:
தைப்பிங மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆடவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை காவல்துறை உறுதி செய்துள்ளது.
உயிரிழந்த அந்த 63 வயது ஆடவர் திருட்டுக் குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கி இருந்த நிலையில், தைப்பிங் IPD லாக்-அப்பில் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இதை, புக்கிட் அமான்,
ஒருங்கிணைப்பு மற்றும் தரநிலை இணக்கத்துறையின் இயக்குநர் டத்தோ அஸ்ரீ அஹமத் தெரிவித்தார்.
"நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட அந்த ஆடவர், இருசக்கர வாகனம் ஒன்றை திருடிய குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருந்தார். மேலும், ஆயுதம் கொண்டு சிறு காயத்தை ஏற்படுத்திய புகாரும் உள்ளது.
"இந்நிலையில் அவர் தடுப்புக் காவலில் இறந்துபோனது குறித்து தடுப்புக்காவல் மரணத்துக்கான குற்றவியல் புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொள்ளும்," என்று டத்தோ அஸ்ரீ அஹமத் மேலும் கூறியுள்ளார்.
தடுப்புக் காவல் மரணச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் சில தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு தடுப்புக்காவல் மரணச் சம்பவம் பதிவாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:32 am
நாடு முழுவதும் மின்னியல் சிகரெட்டிற்கு தடை விதியுங்கள்: பகாங் ஆட்சியாளர் நினைவுறுத்தல்
July 3, 2025, 11:05 am
தலைமை நீதிபதியின் அதிகாரங்களையும் கடமைகளையும் மலாயா தலைமை நீதிபதி நிரப்புவார்
July 3, 2025, 11:04 am
புதிய நியமனம் வரை ஹஸ்னா முஹம்மத் இடைக்காலத் தலைமை நீதிபதியாகச் செயல்படுவார்
July 3, 2025, 10:48 am
தெலுக் இந்தான்: ங்கா-வை வீழ்த்த அவருக்கு இணையான வேட்பாளர் தேவை: ஆய்வாளர் கருத்து
July 3, 2025, 9:45 am
சபா ஜிஎல்சி நிறுவனத்தின் மூத்த நிர்வாகியை எம்ஏசிசி கைது செய்தது
July 3, 2025, 9:36 am