நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீலாயில் பரபரப்பை ஏற்படுத்திய வெடிப்பு சம்பவம்; வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டது: போலிஸ்

நீலாய்:

நீலாய் டேசா பால்மாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகிலுள்ள கடை வீதியின் வாகன நிறுத்துமிடத்தில் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது ஒரு காரில் இருந்த மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் (IED) காரணமாக ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

நெகிரி செம்பிலான் போலிஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அஹ்மது இதனை உறுதிப்படுத்தினார்.

காரை ஆய்வு செய்தபோது வெடிப்புக்குக் காரணமாக இது இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் பல உபகரணங்கள்,  பொருட்கள் அந்தக் காரில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

நேற்று காலை 7 மணியளவில் நீலாய் மாவட்ட போலிஸ் செயல்பாட்டு அறையில் பணியில் இருந்த பணியாளர்கள், சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து தகவல் பெறப்பட்டது.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு ஒரு போலிஸ் குழு அனுப்பப்பட்டது.

பின்னர் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் போலிசார் சோதனை நடத்தினர்.

சோதனையில் வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் வாகனம் இருந்த இடத்திலிருந்து சுமார் 250 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு வீட்டில் IEDகள் என சந்தேகிக்கப்படும் மேலும் மூன்று பொருட்களை குழு கண்டுபிடித்தது.

மேலும் அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஒரு வெடிக்கும் பொருள், பல ஆணிகள் சிதறிக் கிடந்தது.

வாகனத்தை ஆய்வு செய்ததன் விளைவாக, வெடிப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் பல உபகரணங்கள், பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset