நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்க புதிய சட்ட மசோதாவை இயற்ற வேண்டிய அவசியமில்லை: டத்தோஸ்ரீ ரமணன்

கோலாலம்பூர்:

வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்க புதிய மசோதாவை இயற்ற வேண்டிய அவசியமில்லை.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இவ்வாறு கூறினார்.

வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் ஒரு புதிய மசோதாவை இயற்ற வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், வீட்டுப் பணியாளர்களை கட்டாயப் பாதுகாப்புடன் கூடிய ஊழியர்களாகச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் 1991 (சட்டம் 452) இல் விரிவான திருத்தம் செய்வதன் மூலம் மிகவும் பொருத்தமான அணுகுமுறை இருக்கும்.

வேலை வாய்ப்புச் சட்டம் 1955, சபா தொழிலாளர் கட்டளைச் சட்டம், சரவா தொழிலாளர் கட்டளைச் சட்டம் ஆகியவை தற்போது வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாப்பை மட்டுமே வழங்குகின்றன.

குறிப்பாக 14 நாள் பணிநீக்க அறிவிப்பு காலம்,  தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு,  பணி நீக்கம் குறித்து மனிதவளத் துறைக்கு அறிவிப்பது முதலாளியின் கடமையாகும்.

ஊதிய விகிதங்கள், வேலை நேரம் உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்புகள் அரசாங்கத்திற்கும் தொடர்புடைய தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

உண்மையில் வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் 1969ஆம் ஆண்டு ஊழியர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் LINDUNG Pekerjaan திட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறார்கள்.

இதற்கு முதலாளிகள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கான கட்டாயப் பதிவு மற்றும் பங்களிப்புகள் தேவை.

இதில் வேலை விபத்துத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பும் அடங்கும் என்று அமைச்சர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset