நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூன்று கார்கள் மோதி டேங்கர் லோரி விபத்துக்குள்ளானதால் 20 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல்

ஈப்போ:

மூன்று கார்கள் மோதி டேங்கர்  லோரி விபத்துக்குள்ளானதால் 20 கி.மீ. நீளத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஈப்போ மாவட்ட போலிஸ் தலைவர்  அபாங் ஜைனல் அபாங் அஹ்மத் இதனை தெரிவித்தார்.

இன்று கிலோமீட்டர் 281.5 இல் ஒரு டேங்கர் லோரி,  மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இதைத்  தொடர்ந்து  ஈப்போ, சிம்பாங் பூலை இடையேயான வடக்கு-தெற்கு நெடுஞ்ச் சாலையில் 20 கிலோமீட்டர் வரை (கிமீ) போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தைத் தொடர்ந்து, நெடுஞ்ச்சாலையில் தெற்கு நோக்கி பயணித்த காலி டேங்கர் லாரி, நெடுஞ்சாலையின் நடுவில் கடந்ததால் பல பாதைகள் தடைபட்டன.

மேலும் 33 வயது நபர் ஓட்டிச் சென்ற டேங்கர் லாரி இடது பாதையில் இருந்து வலது பாதைக்கு திசை மாறியதால் நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset